மதுரை மாவட்டத்தில் நல வாரிய உறுப்பினர் பதிவு: டிச.14 ல் சிறப்பு முகாம் தொடக்கம்
மதுரை மாவட்டத்தில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்குகிறது.
மதுரை மாவட்டத்தில், சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்திடவும், சீர்மரபினர் அடையாள அட்டையினை புதுப்பிக்கவும் மற்றும் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த சிறப்பு முகாம்கள் பின்வரும் பகுதிகளில் காலை 10.00 மணிமுதல் மதியம் 02.00 மணி வரை நடைபெறவுள்ளது.
முகாம் நடைபெறும் வட்டம்-முகாம் நடைபெறும் இடம்:- முகாம் நடைபெறும் நாள்:
உசிலம்பட்டி வட்டாரவளர்ச்சிஅலுவலகம்,செல்லம்பட்டி- 14.12.2021
பேரையூர்; வட்டாட்சியர் அலுவலகம், பேரையூர் - 21.12.2021
திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம், திருமங்கலம்- 28.12.2021.
திருமங்கலம் ஆ.கொக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்: (செக்காணுரணி)- 04.01.2022.
சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர் என்பதற்கான சாதிச்சான்று மற்றும் குடும்ப அட்டை நகலுடன் சிறப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu