/* */

மதுரை மாவட்டத்தில் விஜயதசமியையொட்டி பல்வேறு கோயில்களில் வித்யாரம்பம்

விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையின்படி கோயில்களில் இந்த நிகழ்வு நடைபெற்றது

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில் விஜயதசமியையொட்டி பல்வேறு  கோயில்களில் வித்யாரம்பம்
X

மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் விஜயதசமியையொட்டி நடைபெற்ற வித்யாரம்பம்

மதுரையில் விஜயதசமியையொட்டி கோவில்களில் இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெற்றது.

நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு கொண்டாடப்படும் விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதற்காக குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கும் நாளை, கோவில்கள் மற்றும் வீடுகளில் புனிதமாகக் கொண்டாடும் நாள்தான் விஜயதசமி. தொடர்ந்து கல்வி , கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பார்கள்.

மழலைக் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு , இசைக் கருவிகள் , நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி , புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவதும் வழக்கம். மங்களகரமான விஜயதசமி நாளான இன்று குழந்தைகளுக்கு வித்யா ரம்பம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தான அ..,ஆ.. ஓம் என்ற எழுத்தை எழுத வைத்தும், நாவில் தேன் வைத்து எழுத்துகளை உச்சரிக்க செய்து குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர்.

Updated On: 15 Oct 2021 9:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!