மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினர்.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட எதிர்க்கட்சிகளை இடை நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி மற்றும் எதிர்க்கட்சிகள் எம் பி க்கள் சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து, மதுரை மாநகர் வடக்கு மாவட்டச்செயலாளர் தீபம் என்ற சுடர்மணி தலைமையிலும், மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன் அவர்கள் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாநிலச் செயலாளர் அகரன், மாவட்டப் பொருளாளர் மணியரசு, செய்தி தொடர்பாளர் தாமரைவளவன், ஐயங்காளை, மணிகண்டன், சிறுத்தை ராஜா, சேவுரத்தினம், உசேன் பாய், கஜினி முகமது, காமராஜ், தென்னிலவன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என, ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மாநில துணைப்பொதுச்செயலாளர் கனியமுதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறி வண்ணகலர் புகை குண்டுகளை வீசிய நிகழ்வு குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவரை மட்டும் அல்லாது நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்களை சஸ்பண்ட் செய்ததன் மூலம் மத்திய ஆளும் பாஜக ஜனநாயகப்படுகொலை செய்து விட்டது.
ஆளும் கட்சி செய்யும் தவறுகளை எதிர்த்து கேள்வி கேட்கத்தான் நாடாளுமன்றமே உள்ளது.அப்படி ஆளும் கட்சியை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி கேட்டதற்கு சஸ்பெண்ட் செய்வது என்பது மக்களாட்சிக்கு விரோதமானது.இதை விடுதலைச் சிறுத்தை கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu