பல்கலைக்கழக விளையாட்டு போட்டி: மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பரிசு
X
By - N. Ravichandran |12 May 2022 4:15 PM IST
கேலே இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது
கேலே இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்தில், ஏப்ரல் மாதம் 23 முதல் மே 3 வரை நடைபெற்றது. இந்தப் போட்டிகளில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக ஆண்கள் பிரிவில், தடகளத்தில் 14 வீரர்களும் பளுதூக்கும் போட்டியில் ஒரு வீரரும், பெண்கள் பிரிவில் கால்பந்து அணிக்கு 20 வீராங்கனைகளும் வாள் சண்டையில் இரண்டு வீராங்கனைகளும் இறகுப்பந்து க்கு 5 வீராங்கனைகளும் மற்றும் தடகளத்தில் 6 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர் . மொத்தம் 48 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், பெண்கள் இறகுப்பந்து அணி வெள்ளிப் பதக்கத்தையும் ஆண்கள் தடகளப் பிரிவில் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கத்தையும் மும்முறை தத்தித் தாவும் போட்டியில் ராபின்சன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.இவர்களை, மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர்ர் ஜெ. குமார் வாழ்த்து தெரிவித்தார். அவருடன், பல்கலைக் கழக பதிவாளர் (பொறுப்பு) எம். சிவகுமார் உடற்கல்வி துறைத் தலைவர் முனைவர் கே. சந்திரசேகரன், உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) மகேந்திரன் மற்றும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் உடன் இருந்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu