மதுரைக்கு குட்கா கடத்திச்சென்ற இருவர் கைது

மதுரைக்கு குட்கா கடத்திச்சென்ற இருவர் கைது
X

பைல் படம்

பெங்களூருவிலிருந்து மதுரைக்கு குட்கா பொருள் கடத்திய இலங்கையைச் சேர்ந்த நபர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்

வெளி மாநிலத்திலிருந்து மதுரைக்கு குட்கா கடத்தி வந்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்புதாசன் பழங்காநத்தம் வ.உ.சி. பாலத்தில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்திய போது, நிற்காமல் சென்றுள்ளனர்

போலீஸார் இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரித்த போது, ஹார்விபட்டியை சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பதும், இலங்கையை சேர்ந்த சிவராஜ் என்பதும் தெரிய வந்தது. மேலும், அவர்கள் பெங்களூருவில் இருந்து சுமார் 16.5 கிலோ மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், விசாரணையில் சிவராஜ் இலங்கை முல்லைத்தீவை சேர்ந்தவர் என்பதும் கள்ளத்தோணியில் ராமேஸ்வரம் வந்து ராஜேஷ் என்ற பெயரில் திருப்பத்தூரை சேர்ந்த ஏஜென்ட் செல்வம் மூலம் சென்னையில் போலியான முகவரியில் டிரைவிங் லைசன்ஸ் எடுத்துள்ளார். மேலும் போலியான பாஸ்போர்ட் தயாரித்து துபாய் சென்று அங்கிருந்து இலங்கை சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து இந்தியா வந்தபோது மேற்படி பாஸ்போர்டை தொலைத்து விட்டாராம்.

இதையடுத்து மீண்டும் போலியான பாஸ்போர்ட் தயாரிக்கும் நோக்கத்தில் துபாயில் உள்ள நண்பர் மூலம் பழக்கமான காசி என்பவருடன் சேர்ந்து மதுரையில் வேறு ஒருவரின் முகவரியில் ஆதார் கார்டு பெற்று அதனைக் கொண்டு, டிரைவிங் லைசன்ஸ் எடுத்துள்ளார். மேலும் செலவிற்காக பெங்களூருவில் இருந்து தடைசெய்யப்பட்ட குட்காவை வாங்கி மதுரையில் விற்பனை செய்ய கடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் காசி மற்றும் இலங்கையை சேர்ந்த சிவராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story