கருமுத்து கண்ணன் மறைவுக்கு டி.வி.எஸ் .வேணு சீனிவாசன் இரங்கல்
தொழிலதிபர் கருமுத்து தி. கண்ணன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கருமுத்து கண்ணன் அவர்களை இன்று நாம் எதிர்பாராமல் இழந்திருப்பது என்னை ரொம்பவே வருத்தமடைய செய்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் அவர் ஒரு நம்பகமான சக ஊழியருக்கும் மேலான ஒருவராகவே இருந்திருக்கிறார். அன்புப் பாராட்டுவதிலும், விசுவாசத்தைக் காட்டுவதிலும் அவர் மிகச் சிறந்த நண்பராக இருந்தார். ஒரு ஆழ்ந்த சிந்தனையாளராகவும், தேவைப்படும் பொழுதெல்லாம் தன்னுடைய அறிவார்ந்த ஆலோசனைகளை கொடுப்பவராகவும் இருந்தவர் கண்ணன்.
சுஸுகி நிறுவனத்திடமிருந்து நாங்கள் பிரிந்து செயல்பட்ட நாட்களில் இருந்து, எங்கள் நிறுவனத்தை சர்வதேச நிறுவனமாக மாற்றிய வெற்றிகரமான பயணத்தின் போது நாங்கள் எதிர்கொண்ட மிகக் கடினமான காலங்களில் வழிநடத்த உதவினார். ஒரு தீர்க்கதரிசியைப் போல் சிந்திக்கும் அறிவாற்றலும், மிக நுணுக்கமான வணிக நிபுணத்துவத் தையும் கொண்டவர் கண்ணன். ஆனால் இவை எல்லாவற்றையும் விட, சமூக நலனில் பெரும் அக்கறைக் கொண்டவராக, இந்த சமூகத்திற்கு அவர் அளித்தது மிக அதிகம். மதுரை தியாகராஜர் கல்லூரி அதற்கு ஒரு சான்று. மேலும் மீனாட்சி கோயிலுக்கு அளவிடமுடியாத பங்களிப்பைக் கொடுத்தவர். கருமுத்துகண்ணன் தனது மீதிருந்த பொறுப்புகளை கருணையுடனும், கண்ணியத்துடனும், அவற்றுக்கான நோக்கத்தைப் புரிந்து கொண்டும் மேற்கொண்டார் என்பதை யாராலும் மறக்கமுடியாது என்றார் வேணு சீனிவாசன்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu