மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி..!

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி..!

மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சி 

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம்.

மதுரை:

மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள ஏபில் கிட்ஸ் சிறப்பு பள்ளியில்‌, மதுரை அமெரிக்கன் கல்லூரி சமூக பணி துறையின் மாணவர்கள் மற்றும் மதுரை அணியம் அகடாமி சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் செவ்வாயன்று நடைபெற்றது.

இதில், தலைமை ஆசிரியர் சிவகாமி மற்றும் ஜே.கே மாஸ் அறக்கட்டளை சுதாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் ஜாஸ்மின் ஜாய் வரவேற்றார். பயிற்சியில், சிறப்பு விருந்தினராக அணியம் அறக்கட்டளையின் நிறுவனர் அழகு ஜெகன் கலந்து கொண்டு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, கேக் தயாரித்தல் மற்றும் எம்ப்ராய்ட்ரிங் போன்ற பயிற்சிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டு, மரம் நடும் பணி நடந்தது.


இப்பயிற்சி மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களும் இச்சமுகத்தில் பொருளாதாரத்தில், முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை அடையும் வகையில், பயிற்சிகள் வழங்கப்பட்டது, என ,அழகு ஜெகன் கூறினார்.

முகாமில், அமெரிக்கன் கல்லூரி சமூக பணித் துறையின் எம்.எஸ்.டபுள்யு முதலாம் ஆண்டு மாணவர்கள் மோகனப்பிரியா, ரித்திகா, தினேஷ் அரவிந்த், சையது மாலிக், ஷாரோன், சம்பத் குமார், ஜனா, ஏ.பில் கிட்ஸ் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story