மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், கடைகளை வைக்க அனுமதி கோரி சாலை மறியல்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், கடைகளை வைக்க அனுமதி கோரி சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்

பெரியார் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய சிறு வியாபாரிகளை அனுமதி அளிக்க கோரி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில், வியாபாரம் செய்ய சிறு வியாபாரிகளை அனுமதி அளிக்க கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பெரியார் பேருந்து நிலையத்தில் தென் இந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில், அமைப்பின் தலைவர் கணேசன், செயலாளர் சிவா, பெருளாளர் கருப்பசாமி மற்றும் ஏராளமான சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story