ரேஷன் கடை சாக்குகளுக்கு டி.என்.சி.எஸ்.சி பணம் தராமல் இழுத்தடிப்பு

ரேஷன் கடை சாக்குகளுக்கு டி.என்.சி.எஸ்.சி பணம் தராமல் இழுத்தடிப்பு
X

பைல் படம்.

ரேஷன் கடைகளுக்கு வழங்கும் சாக்குகளுக்கான பணத்தை டி.என்.சி.எஸ்.சி ஆறு மாதங்களாக வழங்காமல் இருப்பதாக விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு.

மதுரை மாவட்டம் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு சாக்குகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டிஎன்சிஎஸ்சி ஆறு மாதங்களாக வழங்காமல் இழுத்தடித்ததால் விற்பனையாளர்கள் குற்றம் சாட்டினார். இம்மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் கீழே ஒரு ரேஷன் கடைகள் உள்ளன.

கடைகளுக்கு ஜெய்ஹிந்துபுரம், திருமங்கலம், மேலூர், சோழவந்தான், உசிலம்பட்டி உள்ளிட்ட ஆறு டிஎன்சிஎஸ்சி அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மூட்டைகளாக விநியோகிக்கப்படுகின்றன. இப்பொருட்கள் கார்டுதாரர்களுக்கு வினியோகித்த பின் மீண்டும் டிஎன்சிஎஸ்சி-க்கு வழங்கப்படும். இதற்காக ஒரு சாக்கு ரூ.25 முதல் 27 வரை ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பணத்தை ஆறு மாதங்களாக ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படவில்லை என் கூட்டுற்வு சங்க விற்பனையார்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai based agriculture in india