மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைகை ஆற்றிலிருந்து திருமஞ்சனம்
மதுரை வைகை ஆற்றில் இருந்து மதுரை மீனாட்சி அம்மனுக்கு திருமஞ்சன குடம் எடுத்துச் செல்லப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தினமும் முதற்கால பூஜைக்கு வைகை ஆற்றில் இருந்து திருமஞ்சன நீரானது கொண்டு செல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காலத்தின் ஏற்பட்ட ஊரடங்கினால் இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஊரடங்கிற்கு பிறகு வைகை ஆற்றங்கரையில் தடுப்பணை கட்டப்பட்டு நீர் நிரம்பியும், கிணற்றை சுற்றி ஆகாயத்தாமரைகள் மற்றும் முட்புதர்கள் படர்ந்து இருந்ததால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் அப்பகுதியை சுற்றி புனரமைக்கப்பட்டது.
மேலும், தினமும் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்பட்ட திருமஞ்சன நீர் பயன்படுத்தப்படாமல் கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றிலிருந்து முதற்கால பூஜைக்கு புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு வந்தது. இதனால், பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
பாரம்பரிய முறைப்படி வைகை ஆற்றில் உள்ள கிணற்றிலிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முதற்கால பூஜைக்கு திருமஞ்சன நீர் கொண்டு செல்ல மீண்டும் அறங்காவல குழுத் தலைமையில் முடிவெடுக்கப்பட்டு புனித நீர் அமைக்கப்பட்டுள்ள கிணற்றுப் பகுதிக்கு நடந்து செல்வதற்கும் அதனை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்து திருக்கோவில் இணை ஆணையரும் நிர்வாக அதிகாரியான கிருஷ்ணன் தலைமையில் பூஜை நடைபெற்றது.
மூன்று ஆண்டுகளாக வைகை ஆற்றில் இருந்து மீனாட்சி அம்மன் கோவில் முதற்கால பூஜைக்கு எடுத்துச் செல்லப்படாமல் , இருந்த திருமஞ்சன நீர் தற்போது மீண்டும் கொண்டு செல்லப்பட்டது. வைகை ஆற்றங்கரையிலிருந்து மேளதாளங்கள் முழுக சிவாச்சாரியார்கள் வெள்ளி குடத்தில் புனித நீர் சுமந்து சென்று யானை பசுவுடன் உலா வந்து கிழக்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய திருமஞ்சன நீர் எடுத்துச் செல்லப்பட்டது. பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu