மதுரை அருகே வீட்டின் மீது கற்கள், பாட்டில்கள் வீசிய மூன்று பேர் கைது

மதுரை அருகே வீட்டின் மீது கற்கள், பாட்டில்கள் வீசிய மூன்று பேர் கைது
X

பைல் படம்

மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்

ஐராவத நல்லூரில் வீட்டில் கல்வீச்சு பாட்டில் வீச்சு உரிமையாளருக்கு மரக்கட்டை அடி: மூன்று பேர் கைது:

மதுரை ஐராவதநல்லூர் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் முத்து 53.அதே பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் நாகசெல்வமணி 19. இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது .இந்த நிலையில் நாக செல்வமணி19, செந்தில்குமார் மகன் நாக ஜீவா20, சகாயராஜ் மகன் ஸ்டீபன்ராஜ் ஆகியோர் கற்களாலும் பாட்டிலாலும் வீசி கூச்சல் போட்டனர். தட்டி கேட்ட முத்துவை மரக்கட்டையால் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து முத்து தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய மூவரையும் கைது செய்தனர்

அவனியாபுரத்தில்.வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தசிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலி :

திருப்பூர் எம் எஸ் நகர் ராணி மங்கம்மாள் நகரை சேர்ந்தவர் முத்துராஜா. இவரது நான்கு வயது மகன் யோகேஷ் .முத்துராஜா வில்லாபுரம் மீனாட்சி நகர் ராமமூர்த்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் விளையாடிகொண்டிருந்த சிறுவன் யோகேஷ் கால் தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தான்.அவனை அவனை மீட்பதற்குள் சிறவன் மூச்சுத்தினறி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை முத்துராஜா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக்காராவில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை: போலீஸ் விசாரணை :

மதுரை பைக்காரா முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் கருத்த பாண்டி( 34. ) இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது .இதனால் மணமுடைந்த கருத்தப்பாண்டி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உயிருக்கு போராடிய நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மனைவி விஜி சுப்பிரமணியபுரம் போலீஸில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கருத்த பாண்டியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழையகுயவர் பாளையம் ரோட்டில் வீடு புகுந்து 7 பவுன் நகை பணம் திருட்டு:

பழைய குயவர்பாளையம்ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ் பாபு( 47.). சம்பவத்தன்று நள்ளிரவில் இவரது வீடு புகுந்த மர்ம ஆசாமி வீட்டில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை, வெள்ளிசெயின், பணம் ரூ இரண்டாயிரத்தை மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டார். இந்த திருட்டு பின்னர் தெரியவந்தது .இது குறித்து வெங்கடேஷ் பாபு தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து நகை பணம் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

தெற்கு வாசல் பாலம் அடியில் கஞ்சா வைத்திருந்த நபரை பைக் செல்போன்கள் பறிமுதல்:சிறுவன் கைது :

மதுரை தெற்கு வாசல் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தெற்கு வாசல் என்.எம்.ஆர். ரோடு சந்திப்பு ஜெயவிலாஸ் பாலமருகில்ப சந்தேகப்படும்படியாக பைக்குடன் நின்ற சிறுவனை பிடித்தனர் .அவனிடம் சோதனை செய்தபோது அவன் வைத்திருந்த பைக்கில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தான்.அந்த பைக்குடன் இரண்டு செல்போன்களையும் பறிமுதல்செய்து விற்பனை செய்த அந்த சிறவனை கைது செய்தனர். சிறுவனிடம் விசாரித்தபோது கீரைத்துரை வட்டக்குழி கிணற்றுச்சந்ததைச் சேர்ந்தவன் என்று தெரியவந்தது அவனை கைது செய்தனர்.


Tags

Next Story