மதுரை ரயில்வே அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு
ரயில்வே ஊழியர்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் காட்சிகள் தற்போது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இரண்டு தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே தகராறு முற்றியதால் அடிதடி வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவிவருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் அருகில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அலுவலகத்தில் பணிபுரியும் இரண்டு ரயில்வே தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டு, தகராறு முற்றி ரயில்வே ஊழியர்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் காட்சிகள் தற்போது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது: மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரியை சந்திக்கும் போது, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பை சேர்ந்த கோட்ட செயலாளர் முகமது ரபீக் என்பவர் சங்க நிர்வாகிகளுடன், தெற்கு ரயில்வே எம்பிளாயிஸ் சங்கத்தை சேர்ந்த தலைவர் நாகேந்திரனை கருத்து வேறுபாடு காரணமாக அதிகாரி அறை முன்பாகவே கடுமையாக பேசியதாகவும், தாக்கியதாகவும், இது இரண்டு ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை எனவும், கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட பிரச்னை எனவும், அது சிறிது நேரத்தில் தடுக்கப்பட்டு பிரச்னை முடிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu