மதுரை சித்திரை திருவிழாவை நவராத்திரி கொலுவாக அலங்கரித்த பெண்மணி

மதுரையில் ஒரு வீட்டில் நவராத்ரி விழாவில் சித்திரை திருவிழா காட்சிகொலு அமைக்கப்பட்டுருந்தது
உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நவராத்திரி கொழுவாக அலங்கரித்து மதுரையில் ஒரு பெண்மணி அசத்தியுள்ளார்.
உலகை அச்சுறுத்திய, கொரோனா வைரஸ் பரவலால் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது பலரும் இன்னுயிர் இழந்தும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சூழல் ஏற்பட்டது. இதனால், கோயில்களில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளும் தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக, மதுரையில் நடைபெறும் உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழாக்கள் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும். மதுரை மக்கள் மட்டுமின்றி வெளியூர், வெளிநாட்டவர்களுக்கும் பெரும் ஏமாற்றத்துடன் கவலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, திருவிழா சார்ந்த தொழில்களும் முடங்கிய பொருளாதார இழப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வரும் சித்திரை திருவிழா இனி வரும் காலங்களில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெற வேண்டும் எனவும், தொடர்ந்து, உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக, மதுரை காளவாசல் பொன்மேனி பகுதியே சேர்ந்த சுபா என்பவர் நவராத்திரியை முன்னிட்டு, கொலுவைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்.
தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் கொலு வைத்து வழிபாடு நடத்தி வரும் சுபா இந்த ஆண்டு கொரோனாவால் நடைபெறாமல் இருந்த சித்திரை திருவிழாவை கொண்டாடும் பொருட்டு, தனது இல்லத்தில், வைக்கப்பட்டுள்ள கொலு அலங்காரத்தில் நவீன முறையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை கொலுவாக அலங்கரித்துள்ளார். அதன்படி மீனாட்சி அம்மன் பேண்ட் வாத்தியங்களோடு காரில் திக்விஜயம் நிகழ்ச்சியும், மீனாட்சி சொக்கநாதர் திருமண வைபவம், அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு சிறப்பு விருந்து மற்றும் பிரிட்ஜ், பீரோ சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைகள் என கொழுவாக அலங்கரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu