உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவிற்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்
மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மதுரை உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்கு, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க உரிய முன்னேற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவில் உள்ளது.
இதனால் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவுக்கு வைகை அணையில் இருந்து வைகை ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும். என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத போதும் தொடர்ந்து ஐந்து மாதங்களாக முழு கொள்ளளவில் இருக்கிறது. தற்போது வைகை அணையில் 69 அடிக்கு மேலாக தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில் சித்திரை மாதத்தில் மதுரையில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவின்போது, வைகை அணையில் இருப்பைப் பொறுத்து வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையில் தண்ணீர் குறைவாக இருந்தால் மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக மதுரையில் சித்திரை திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.இந்த ஆண்டு சித்திரை திருவிழா அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.இந்த வருடம் அடுத்த வாரத்தில் உலக பிரசித்திபெற்ற வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளதால், கள்ளழகர் ஆற்றில இறங்கும் விழாவிற்காக அணையில் இருந்து கண்டிப்பாக தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது குறித்து அரசுக்கு பொதுப்பணித்துறை சார்பில் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதி வழங்கியதும் திருவிழா நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu