மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர்

மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர்
X

மதுரை அண்ணா நகரில், ஆர்ப்பாட்டம் செய்த டாஸ்மார்க் பணியாளர் சங்கத்தினர்.

மதுரையில தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நான்கு அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் மதுரை மண்டல சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீண்ட காலமாக தற்காலிக பணி நீக்கம், கிடங்கு பணி மாவட்ட பணியிட மாற்றம் பெற்ற பணியாளருக்கு உடனடியாக கலந்தாய்வு மூலம் பணி வழங்கப்பட வேண்டும், பணி நிரவலில் உள்ள குறைபாடுகளை களைத்திட வேண்டும், ஏபிசி சுழற்சிமுறை பணியிட மாற்ற கொள்கையை அமுல்படுத்திடவேண்டும், தமிழகத்தில் சில பிரச்சனைகள் தொடர்பாக 10 க்கும் மேற்பட்ட சில்லரை மதுபான கடைகள் மூடப்பட்ட கடை பணியாளர்களை கலந்தாயில் சேர்க்காமல், உடனடியாக கடைப் பணி வழங்கிட வேண்டும் என்ற 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மதுரை மண்டலம் சார்பில் அம்பிகா தியேட்டர் முன்பு அதன் மாநில துணைத் தலைவர் மரகதலிங்கம், தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் , தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சாமிநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் .

இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டச் சேர்ந்த தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேரூராட்சி பணியாளர் சங்க நிர்வாகி இரா. பிச்சைமுத்து கோரிக்கைகளை விளக்கி கண்டன கோஷங்கங்களை முழங்கினார்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு