வேகத்தடை இல்லையென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கருத்து

வேகத்தடை இல்லையென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள்  கருத்து
X

மதுரை சிவகங்கை சாலையில் வேகத்தடை அமைக்கப்பட வேண்டுமென வாகனஓட்டிகள்

மதுரை சிவகங்கை சாலை சந்திப்பில் வேகத்தடை அமைத்து விபத்தை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மதுரை சிவகங்கை சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

மதுரை ஆறாவது மெயின் ரோடும், சிவகங்கை சாலையும் சந்திக்கின்றன. இந்த சாலையில் இரு வழித்தடங்களில் வாகனங்கள் அதிக வேகமாக வருவதால், அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. மதுரை நெடுஞ்சாலைத்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் மதுரை- சிவகங்கை சாலையில் ஆறாவது மெயின் ரோடு சந்திப்பில் வேகத்தடை அமைத்தால், பெரிய விபத்துகள் நேரிடுவதை தவிர்க்க முடியும். வேகத்தடை அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!