மதுரை ரயில் நிலையத்தில் தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த போலீஸார்

மதுரை ரயில் நிலையத்தில் தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த போலீஸார்
X

மதுரை ரயில் நிலையத்தில் ரயிலில் தவறவிட்ட 26 1/2 பவுன் தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்

மதுரை ரயில் நிலையத்தில் ரயிலில் தவறவிட்ட 26 1/2 பவுன் தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

மதுரை ரயில் நிலையத்தில் ரயிலில் தவறவிட்ட 26 1/2 பவுன் தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

மதுரையில் இன்று செங்கோட்டை- மயிலாடுதுரை பயணிகள் இரயிலில் சங்கரன் கோவிலிருந்து, மதுரைக்கு பயணம் செய்து வந்த கே.புதூரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தான் பயணத்தின்போது கொண்டு வந்திருந்த கட்டைப்பை அதனுள் இருந்த மணி பர்ஸிலிருந்த தங்க டாலர் செயின், தங்க அட்டியல், தங்க கொடி செயின் உள்ளிட்ட மொத்தம் இருப்பது ஆறரை (26 1/2) பவுன் தங்க நகைகளை, இரயிலில் தனது இருக்கையில் மறந்து வைத்துவிட்டு இறங்கி சென்றுள்ளார்.

தொடர்ந்து, இரயில் நிலையத்தைவிட்டு வெளியில் சென்ற பின்னரே தான் வைத்திருந்த கட்டப்பையை ரயிலில் தவறவிட்டதை உணர்ந்த அவர் உடனே மதுரை இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில், சார்பு ஆய்வாளர் தலைமையில் குழுவினர் உடனடியாக தேடுதல் நடவடிக்கை எடுத்து தவறவிட்ட கட்டப்பையுடன் தங்க நகைகளையும் மீட்டு மாரியம்மாளிடம் ஒப்படைத்தனர். ரயிலில் தவறவிட்ட தங்க நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags

Next Story