மதுரை மத்திய தொகுதியில் சாலையை திறந்து வைத்த அமைச்சர்
மதுரை மத்திய தொகுதியில் சாலையை திறந்து வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன.
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 75, வசந்தநகர் 3வது மேற்கு 1வது குறுக்கு தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும்,வார்டு 54, காஜிமார் முதல் தெரு மற்றும் ஹீரா நகர் ஆகிய 2 பகுதிகளில் ரூ.23.50 லட்சம் மதிப்பீட்டிலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலைகளை மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், மேயர் இந்திராணி பொன்வசந்த்,மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி,உதவிஆணையாளர், மாநகராட்சி மக்கள்தொடர்பு அலுவலர் மகேஸ்வரன்,சுகாதாரஅலுவலர்,உதவி பொறியாளர்கள்,கண்காணிப்பாளர்கள்,மாநகராட்சி அலுவலர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமானது மதுரை மத்திய தொகுதி. இந்தியாவின் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்து இருக்கும் தொகுதி. அடுத்தபடியாக கூடல் அழகர் பெருமாள் கோவில். இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்ளிட்ட எண்ணற்ற ஆலயங்கள் இந்த தொகுதியில் உள்ளன. மதுரையின் பழமையை உலகுக்கு பறைசாற்றும் பல்வேறு வரலாற்று தலங்கள், மத்திய தொகுதியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. இதுதவிர கோட்ட ரெயில்வே அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், மத்திய சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்கள் உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu