மதுரையில் இ - சேவை மையத்தை தொடக்கி வைத்த அமைச்சர்

மதுரையில்  இ - சேவை மையத்தை  தொடக்கி வைத்த அமைச்சர்
X

இ சேவை மையத்தை தொடங்கி வைத்து பயனாளிகள் பலருக்கு இந்த சேவை மூலம் சான்றுகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசமாக தொகுதி மக்கள் பயன் பெறும் வகையில் அளிக்கப்பட உள்ளது.

மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், இ-சேவை மையத்தினை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை, புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு,மக்கள் அரசாங்கத்தைத் தேடி,நாடி வரும் சேவையை அரசே மக்களிடத்திலே கொண்டு போய் சேர்க்கும் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது .அதன்படி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ - சேவை மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராமப்புற வறுமை ஒழிப்பு குழுக்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மற்றும் கண்டோன்மெண்ட் போர்டு மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்தின் அருகாமையிலேயே வழங்குகின்றன.

இதனை மேம்படுத்தும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்களை தொடங்கி மக்கள் இணைய வழி சேவைகளை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன.இதன்படி, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்கெனவே தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்பாட்டில் இ சேவை மையம் செயல்பட்டு வந்தது

இந்த நிலையில் ,மேசை கணினி, பயனர் எண் மற்றும் கடவுச்சொல் அரசின் சார்பில் வழங்கப்பட்டு அதனை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை, புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இதில், அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசமாக தொகுதி மக்கள் பயன் பெறும் வகையில் அளிக்கப்பட உள்ளது.இதனை தொடங்கி வைத்து, பயனாளிகள் பலருக்கு இந்த சேவை மூலம் சான்றுகளை அமைச்சர் வழங்கினார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை