ஏப். 14 ல் மாங்கல்ய பாக்கியத்திற்கான காரடையான் நோன்பு தொடக்கம்
ஏப். 14-ல் காரடையான் நோன்பு தொடங்குகிறது
காரடையான் நோன்பு 14-3-2022 திங்கட்கிழமை இரவு 07:00 மணிமுதல் 09:00 மணி ( புதன் ,சந்திர ஹோரையில் ) வரையான நேரத்தில் அனுஷ்டிக்கலாம் , 14-3-2022 இரவு 11:36 மணிக்கு மாதம் ஆரம்பமாகிறது. மாசி இருக்கும் போது சரடு கட்டிகொள்வது வழக்கம்.
விரத முறை: மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் கூடும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில், இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக்கருதி வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu