ஜூப்பிலி டவுன் பகுதியில் அடிப்படை வசதிகள் வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஜூப்பிலி டவுன் பகுதியில் அடிப்படை வசதிகள் வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
X

அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை வைத்த மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள்

மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் சாலையை சீரமைக்க, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை வைத்தனர்.

மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் என்பது மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதியாகும். இங்கு சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம், தெரு விளக்கு பகுதி ஆகியவை அமைக்கவும், சாலை வசதியினை ஏற்படுத்தி தரவேண்டி, ஜூப்பிலி டவுன் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து, அமைச்சர் பி. மூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் மூலமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக, சங்க நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!