மதுரை அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியின் சடலம் மீட்பு: தீயணைப்புத் துறை!

மதுரை அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியின் சடலம் மீட்பு: தீயணைப்புத் துறை!
X

மதுரை நிலையூரில் ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி கிணற்றில் விழுந்து பலி, ஆறு மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து மூதாட்டி உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர்

மதுரை அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியின் சடலம் தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டது.

மதுரை நிலையூரில் ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி கிணற்றில் விழுந்து பலி, ஆறு மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து மூதாட்டி உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர்

மதுரை மாவட்டம், நிலையூர் கிராமத்தில் , ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி பஞ்சவர்ணம் (65). என்பவர் வீடு திரும்பாத நிலையில் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவர் ஆடு மேய்ந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, கிணற்றின் அருகே அவர் பயன்படுத்திய துண்டும் டிபன் பாக்ஸ் கிடந்துள்ளது.

அவர் கிணற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆறு மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு கிணற்றிலிருந்து மூதாட்டியின் உடலை கண்டு பிடித்து வெளியே எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, உயிரிழந்த பஞ்சவர்ணத்தின் உடல் உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சவர்ணம் கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா இல்லை அவரை வேறு யாரும் கொலை செய்து உடலை கிணற்றில் வீசினார்களா என்கிற கோணத்தில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாடு மேய்ப்பதற்காக சென்ற மூதாட்டி கிணற்றில் இறந்து கிடந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!