/* */

தமிழகத்தை திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்யும்: முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ

அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்

HIGHLIGHTS

தமிழகத்தை திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்யும்: முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ
X

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

அதிமுக திமுகவுடன் இணைந்துவிடும் என்ற கருத்து ஏற்புடையது அல்ல என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

மறைந்த முன்னாள் முதல்வர் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை உள்ள ஜெ ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பண பலம், கூட்டணி பலம், அதிகார பலம் தான் திமுக வென்றதற்கு காரணம். ஜெயலலிதா இல்லாமல், முதல் முறையாக அதிமுக தனித்து களம் கண்டது.

அதிமுகவில் தலைமையே கிடையாது. இப்போது, இருப்பவர்களை கட்சியை வழிநடத்த நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம். அதிமுக வாக்கு வங்கி குறையவில்லை. வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை. திமுக ஆட்சி மீது உள்ள விரக்தியில் மக்கள் முழுமையாக வாக்களிக்கவில்லை.

அதிமுக திமுகவில் இணைந்துவிடும் என ,அமைச்சர் ஐ.பெரியசாமி கூறிய கருத்து ஏற்கத்தக்கது அல்ல. திமுக தான் அதிமுகவில் இணையும். பாஜக மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்வதற்கு காரணம், அது எப்போதும் வளரும் கட்சி என்பதால் அப்படித்தான் சொல்வார்கள். தமிழகத்தை என்றுமே திமுக, அதிமுக தான் ஆட்சி செய்யும். மாற்றுக் கட்சியினர் யாராலும் ஆள முடியாது என்றார் செல்லூர் ராஜு.


Updated On: 24 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!