தமிழக வி.ஏ.ஓ. சங்க மாநில நிர்வாகிகள் தேர்தல்: புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழக வி.ஏ.ஒ. சங்கத்தின் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பாளர்களுக்கான தேர்தல் மதுரையில் நடைபெற்றது.இதில், மாநில தலைவராக மதுரை இராஜன் சேதுபதி , மாநில பொதுச் செயலாளராக கடலூர் சந்தானகிருஷ்ணன் , மாநில பொருளாளராக திருவாரூர் ராஜ்குமார் , மாநிலத் துணைத் தலைவராக திருவள்ளூர் பாலகிருஷ்ணன் , மாநில செயலாளர்களாக சிவகங்கை செல்வன் மற்றும் விருதுநகர் பாண்டியன் , மாநில அமைப்புச் செயலாளராக ராமநாதபுரம் அசோக்குமார் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில தேர்தல் ஆணையர் முருகன் தேர்தலை நடத்தினார்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி மாறுதல்கள் இணையதளம் மூலமாக இனிவரும் காலங்களில் செயல் படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால், தாமதமின்றியும் வெளிப்படைத் தன்மையுடனும் மாறுதல்கள் பெற வாய்ப்பு அளித்த முதலமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர் , வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோருக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu