தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் உதயக்குமார்

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: முன்னாள் அமைச்சர் உதயக்குமார்
X
திமுக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் எம்எல்ஏ திட்டவட்டமாக தெரிவித்தார்

திமுக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக அதிமுக சார்பாக கோடை காலத்தை ஓட்டி நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது: பட்ஜெட்டில் போதுமான திட்டங்கள் இல்லை.கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியின் செயல்பாடுகள் குறைக்கப்படுகிறது.

அதிமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக முதல்வரின் கடிதத்தை குடியரசுத்தலைவர் வரை கொண்டு சென்றோம். ஆனால், திமுகவின் கடிதம் சென்னையை தாண்டவில்லை. இன்னும் திமுக அரசால் ஒரு போதும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார் .

இந்த நிகழ்ச்சியில், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், சேர்மன் ராஜேஷ் கண்ணா, வாடிப்பட்டி பேரூர் நிர்வாகி சோனைமற்றும் டாக்டர் அசோக் மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஒன்றிய செயலாளர் குருவித்துறை வனிதா சோழவந்தான் வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story