தமிழகம் திராவிடபூமி: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வாக்கு அளித்தார்.
பலாப்பழத்தை தேடி ஈக்கள் வேண்டுமானல் வரும், ஒரு அதிமுக தொண்டன் கூட வர மாட்டான். செல்லூர் ராஜூ:
மதுரை:
தேர்தலுக்கு பின்னர் அதிமுக தங்களிடம் வந்து விடும் என ஓ.பி.எஸ். தெரிவித்தற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்:
ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
பாஜக 400 சீட் வெல்லுமா என்ற கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்:
தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள்
தமிழர்களின் உரிமை மீட்பதும் பலத்தை காப்பாற்றுவதும் அதிமுகவின் கொள்கை
இந்தியா கூட்டணியில் கூட யார் பிரதம வேட்பாளர் என, கூறவில்லை.
பாஜக கூட்டணியில் தான் மோடி பிரதமர் வேட்பாளர் என கூறுகிறார்கள்.
பாஜகவிற்கு மேலாக ஒரு தலைமை உள்ளது, அவர்கள் மோடி பிரதமரா என இன்னும் கூறவில்லை.
பாஜக விதிகளின்படி இரண்டு முறைக்கு மேல் பிரதமராக பதவி வைக்க முடியாது எனக் கூறுவார்கள்.
தேர்தலுக்குப் பின்னரே யார் பிரதமர் என, தெரியவரும், மக்கள் தான் எஜமானர்கள் மக்கள் முடிவு செய்பவர்கள் தான் பிரதமராக வர முடியும்
தமிழகத்திற்கு யார் நன்மை செய்வார்கள் என பார்த்து அவர்களுக்கு தான் எங்கள் ஆதரவு தருவோம்.
தமிழ்நாடு என்பது திராவிட பூமி ஆகவே, திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu