மதுரையில் விஷால் டி மாலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: மக்கள் வெளியேற்றம்
மதுரை விஷால் டி மாலில் தீ விபத்தால் வெளியேற்றப்படும் மக்கள்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மாலிலில், இரவு சுமார் 9.30 மணி அளவில் வணிக வளாகத்தின் நான்காவது மாடியில் உள்ள பானிபூரி கடையில் தீப்பிடித்து வளாகம் முழுவதும் பரவியது. இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வளாகத்தில் இருந்த சுமார் 1000க்கும் மேற்பட்டோரை தீயணைப்புத்துறையின் மூலம் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேற்படி நிகழ்வு தொடர்பாக உயிர் சேதம் ஏதும் இல்லாத நிலையில், உடனடியாக உள்ளே இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்துறையினர் மூலம் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.
மதுரையின் நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த வணிக வளாகத்திற்கு ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு அப்போதைய ஐஏஎஸ் அதிகாரி சகாயம் செயல்பட அனுமதி கொடுக்காத நிலையில், அவர் மாற்றத்திற்கு பின்பாக திறக்கப்பட்ட இந்த வணிக வளாகம் தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
வணிக வளாகத்தின் அருகில் பெட்ரோல் பங்க், பள்ளிகள் மற்றும் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி உள்ள நிலையில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத இந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த பகுதி முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. காவல்துறை துணை ஆணையர், ஆர்டிஓ , வடக்கு வட்டாட்சியர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் தற்போது சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu