மதுரையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பேச்சாளர் பயிற்சி முகாம்!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பேச்சாளர் பயிற்சி முகாம் மதுரையில் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டலம் சார்பாக யானைக்கல் ஹோட்டல் பிரசிடென்ட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மண்டல செயலாளர் முஜிபுர் ரகுமான் தலைமையில் வெல்லட்டும் மதச்சார்பின்மை ! மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு, மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் சீமான் சிக்கந்தர் வரவேற்புரையும், மாநில பொதுச் செயலாளர் எஸ்.பி.நஸ்ரூதீன் துவக்க உரையும் நிகழ்த்தினார்கள்.

இந்த சிறப்பு பயிற்சி முகாமில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக ,கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் பிலால்தீன் நன்றியுரையாற்றினார். இதில், கட்சியின் மண்டலத்திற்குட்பட்ட பலர் பங்கேற்று சிறப்பத்தனர்.

மாநாட்டின் நோக்கத்தினை அனைத்து மக்களுக்கும் சேர்த்திடும் வகையில் அதிகப்படியான தெருமுனைப் பிரச்சாரங்களை முன்னெடுப்பது, அதன் மூலம் பெருவாரியான பொதுமக்களை மாநாட்டில் கலந்து கொள்ள செய்வது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!