மாநில அளவிலான பூப்பந்தாட்டம் போட்டி: மதுரை மாணவிகள் சாதனை

மாநில அளவிலான பூப்பந்தாட்டம்  போட்டி: மதுரை மாணவிகள் சாதனை
X

மாநில பூப்பந்து போட்டியில்‌ தொடர்ந்து  8 ஆண்டுகளாக முதலிடம்‌ பெற்று சாதனை படைத்த மதுரை ஓ.சி.பி.எம்‌.பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளி மாணவிகள்‌

மாநில பூப்பந்து போட்டியில்‌ மதுரை ஓ.சி.பி.எம்‌.பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளி மாணவிகள்‌ 8 ஆண்டுகளாக முதலிடம்‌ பெற்று சாதனை

மாநில அளவிலான பூப்பந்து போட்டியில்‌ மதுரை ஓ.சி.பி.எம்‌.பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளி மாணவிகள்‌ தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதலிடம்‌ பெற்று சாதனை:

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக 38வது மாநில அளவிலான பாரதியார்‌ தின பூப்பந்து குழு விளையாட்டுப்‌ போட்டி நாமக்கல்‌ மாவட்டத்திலுள்ள பாவை பொறியியல்‌ கல்லூரியில்‌ கடந்த வாரம் 5-ம் தேதி முதல்‌ 7-வரை நடைபெற்றது. 38 மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளின் அணிகள்‌ பங்கு பெற்றன. இந்த போட்டிகளில், மதுரை ஓ.சி.பி.எம்‌. பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளி மாணவிகள்‌ முதல்‌ சுற்றில்‌ திருப்பத்தூர்‌ அணியை 35-18, 35-08 என்ற புள்ளிக்கணக்கில்‌ வென்றனர்‌. இரண்டாவது சுற்றில்‌ திருப்பூர்‌ அணியை 35-9, 35-12 என்ற புள்ளி கணக்கில்‌ வென்று கால்‌ இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

கால்‌ இறுதியில்‌, நாகப்பட்டிணம்‌ அணியை 35-12, 35-18 என்ற புள்ளி கணக்கில்‌ வென்று அரை இறுதி போட்டியில்‌ விழுப்பும்‌ அணியை 35-16, 35-13 என்ற புள்ளி கணக்கில்‌ வீழ்த்தினர்‌. இறுதிப்‌ போட்டியில்‌ கிருஷ்ணகிரி அணியை 35-16, 35-23 என்ற புள்ளி கணக்கில்‌ வென்று முதல்‌ இடத்தைப்‌ பெற்று தங்கப்பதக்கத்தையும்‌, கோப்பையையும்‌ கைப்பற்றினர்‌. வெற்றி பெற்ற மாணவிகளை மதுரை இராமநாதபுரம்‌ திருமண்டில் பேராயர்‌ அருட்பெருந்திரு ஜெய்சிங் பிரின்ஸ்‌ பிரபாகரன்‌, மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்‌ செங்கதிர் ஓ.சி.பி.எம்‌. பள்ளித்தாளாளர்‌ டேவிட்ஜெபராஜ்‌, தலைமையாசிரியை மேரி, உடற்கல்வி இயக்குனர்‌ பெர்சீஸ்‌, உடற்கல்வி ஆசிரியர்கள்‌ ராஜேஸ்கண்ணன்‌, சர்மிளா ஆகியோர்‌ பாராட்டினார்கள்‌.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!