சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள்

சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள்
X

சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் நரசிம்மருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

சக்கரத்தாழ்வார், நரசிம்மருக்கு பக்தர்களால், பால், இளநீர், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது

மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதையொட்டி, இக்கோயில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வார், நரசிம்மருக்கு பக்தர்களால், பால், இளநீர், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் பக்தர்களுக்கு அர்ச்சனை நடைபெற்றது. இத்திருக்கோவிலில், மாதந்தோறும் நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி ,சிறப்பு அபிஷேகமானது இன்று காலை நடைபெற்றது . பக்தர்கள்கலந்து கொண்டு, நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதை அடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலய நிர்வாக குழு மற்றும் பெண்கள் ஆன்மீக குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!