வைகை விநாயகர் ஆலயத்தில் லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை
மதுரை அண்ணாநகர் ,வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில் லட்சுமி ஹயக்ரீவிற்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
மதுரை அண்ணா நகர் ,வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் அமைந்துள்ள, லட்சுமி ஹயக்கீரிவருக்கு, திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, பக்தர்களால், பால், தயிர், இளநீர் போன்ற அபிஷே திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, லட்சுமி ஹயக்ரீவர் அலங்கரிக்கப்பட்டு, துளசியால் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.இதை அடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இது குறித்து சிவாச்சாரியார்கள் கூறியதாவது: ஞானமுள்ள ஆனந்தமயமான தேவர், தூய்மையானவர், சகல கல்வி கலைகளுக்கு ஆதாரமானவர். இவற்றை எல்லாம் கொண்ட ஸ்ரீஹயக்ரீவரை உபாசிக்கிறேன்’ என்பது பொருள்.
கேட்டவற்றை உடனே அளிக்கக்கூடியவர் ஸ்ரீ ஹயக்ரீவர். ஸ்ரீஹயக்ரீவரை விரதமிருந்து மனத்தில் தியானித்து, ஹயக்ரீவ பஞ்ஜர ஸ்தோத்திரத்தைக் கூறுபவர்களுக்கு எல்லாக் கஷ்டங்களும் நீங்கி விரும்பியது யாவும் கிடைக்கும்.குழந்தைகளைப் படிப்பில் மேன்மை அடையச் செய்யும்.
ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும்.அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.
ஹயக்ரீவர் கல்விக்கு அதிபதியான தெய்வத்தின் ஆசிர்வாதம் அனைத்து பேருக்கும் நிறைந்து இருக்க வேண்டும் என்ற நோக்கோடு இந்த ஆவணி திருபுவனம் என்று சொல்லக்கூடிய ஆவணி மகா திருபுவனம் ஓனம் பண்டிகை என்று சொல்வார்கள் அந்த திருவோணத்தில் ஹயகிரிவர் அவதாரம் எடுத்த நாள் மகாவிஷ்ணுவோட 18 வது அவதாரம் என்று கருதப்படுகிறது.
ஆவணி அவிட்டம்: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, மதுரை நகரில் உள்ள பல கோயில்களில் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆவணி அவிட்டத்தின் முன்னிட்டு, பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி கோயில்கள் நடைபெறும். அதேபோன்று, இந்த ஆண்டும் மதுரை நகரில் உள்ள பல கோயில்களில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தினர். முன்னதாக, சிவபெருமான் மற்றும் பெருமாளுக்கு ,சிறப்பு பூஜைகள் செய்து, அதை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதை அடுத்து, கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu