மதுரை பகுதி கோயில்களில் காலபைராவாஷ்டமி சிறப்பு பூஜை

மதுரை பகுதி கோயில்களில் காலபைராவாஷ்டமி சிறப்பு பூஜை
X

மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், காலபைரவருக்கு நடந்த சிறப்பு பூஜை:

கால பைரவருக்கு வடைமாலை அணிவித்து, தயிர்சாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

மதுரை மாவட்டத்தில், பல கோயில்களில், கால பைரவாஷ்டமியையொட்டி, சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்றது.

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் கால பைரவாஷ்டமியையொட்டி, பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடைபெற்றது.முன்னதாக, கால பைரவருக்கு வடைமாலை அணிவித்து, தயிர்சாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் ஈஸ்வரபட்டர் தலைமையில், கால பைரவருக்கு, சிறப்புத் திருமஞ்சணமும், வடைமாலைகள் அணிவிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்திலும், கால பைரவருக்கு பட்டர் பரசுராமன் சிறப்பு அர்ச்சனைகளை செய்தார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!