மதுரை மாநகராட்சியில் சிறப்பு தூய்மைப் பணி

மதுரை மாநகராட்சியில் சிறப்பு தூய்மைப் பணி
X

மதுரை மாநகராட்சி முனிச்சாலை பகுதியில் நடைபெற்ற சிறப்பு தூய்மைப்பணிகளை பார்வையிட்ட மேயர் இந்திராணிபொன்வசந்தன்

மதுரை மாநகராட்சி சிறப்பு தூய்மை பணி மேயர் வ.இந்திராணி பொன்வசந்த துவக்கி வைத்தார்

மதுரை மாநகராட்சியில் சிறப்பு தூய்மை பணி மேயர் வ.இந்திராணி பொன்வசந்த துவக்கி வைத்தார்

மதுரை மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண்.43 முனிச்சாலை பகுதியில் சிறப்பு தூய்மை பணியினை, மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.கா.ப.கார்த்திகேயன் ஆகியோர்துவக்கி வைத்து, பார்வையிட்டனர்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பள்ளிக்கூடங்கள், சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, மண்டலம் 4 வார்டு எண்.43 முனிச்சாலை பகுதியில் சிறப்பு தூய்மைப்பணியினை, மேயர் துவக்கி வைத்தார்

இந்த சிறப்பு தூய்மைப்பணிகள், முனிச்சாலை மெயின் ரோடு, இஸ்மாயில்புரம், சீனிவாச பெருமாள் கோவில் தெரு, வெங்கடஜலபதி ஐயங்கார் தெரு, நியூ இங்கிலிஷ் கிளப் காலனி, ராசயணப்பட்டறை தெரு, பட்லர்கான் தெரு, குருவிக்காரன் சாலை, வைகை ஆறு தெற்கு கரையோர பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் 28.04.2022 முதல் 30.04.2022 வரை மூன்று நாட்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியில், சுமார் 85 தூய்மை பணியாளர்கள், 40 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 25 பொறியியல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், இப்பணியில் 2 கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் இயந்திரம், 2 ஜே.சி.பி. இயந்திரம், 2 மண் கூட்டும் வாகனம், 5 டிராக்டர்கள்;, 2 பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் வாகனம், 4 பேட்டரி வாகனம், 8 டிரை சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களும் இந்த சிறப்பு தூய்மைப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பணியின் மூலம், ஒவ்வொரு வீடு வீடாக மக்கும் குப்பைகள் மற்றும் மட்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல், தெருக்களை கூட்டி சுத்தம் செய்தல், முக்கிய பிரதான சாலைகளில் தேங்கியுள்ள மணல்களை அள்ளுதல், தேவையற்ற குப்பைகளை அகற்றுதல், டெங்கு கொசு புழு உற்பத்தியாகும் இடங்களில் புகை மருந்து அடித்தல் போன்ற பல்வேறு தூய்மைப் பணிகள் சிறப்பு தூய்மைப் பணியில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, நகரப்பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.ராஜா, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் சிவசுப்பிர மணியன், சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ், உதவிப் பொறியாளர்கள் சந்தனம், முருகன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி