மதுரை அருகே பிடிபட்ட கடத்தல் ரேஷன் அரிசி
மதுரையில் பிடிபட்ட ரேஷன் அரிசி
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் செயல்பட்டு வரும் வானமாமலை நகர் ரேஷன் கடையில் நேற்று மர்ம நபர்களால் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலை த்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, அரிசி மூடைகளை கடத்தப்படுவதாக உணவு வழங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதனைத்
தொடர்ந்து, ஜீவாநகர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஜெய்ஹிந்த் புறத்தை சேர்ந்த கார்த்திகேயன்( 28). என்பவர் இருசக்கர வாகனத்தில் அரிசி மூடைகளுடம் போலீசாரிடம் பிடிபட்டார். தொடர்ந்து ,அவரிடம் இருந்து சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 150 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றியதைத் தொடர்ந்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சமூக அலுவலர் கூறுகையில் பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய ரேஷன் அரிசி மற்றும் பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் போன்றநை தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர் கூலிக்கு வேலை செய்தவர். இதற்கு பின்புலமாக உள்ள சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த ரேஷன் பணியாளர்களை கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்று எந்தப் பகுதியில் நடக்காத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது அனைத்து ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு இருப்புகளை கண்காணிக்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu