மதுரை அண்ணாநகர் அருகே சாலையில் பெருக்கெடுத்தோடும் சாக்கடை நீர்

மதுரை அண்ணாநகர் அருகே சாலையில் பெருக்கெடுத்தோடும் சாக்கடை நீர்
X

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் வீரவாஞ்சி தெருவில், சாலையில் ஓடும் கழிவு நீர்.

மதுரை தாசில்தார் நகர் தெருக்களில் மழை நீருடன் சாக்கடை நீரும், கலந்து சாலையில் பெருக்கெடுத்து செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது

மதுரை நகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழையால், வாய்க்கால்கள் கழிவு நீரானது செல்ல வழி இல்லாமல், சாலையிலே குளம் போல தேங்கியுள்ளது.

மதுரை மேலமடை தாசில்தார் நகர் வீரவாஜி தெருவில், மழையால் சாக்கடையில் கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையிலே ஓடுகிறது. இதனால், அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மதுரை தாசில்தார் நகர், வீரவாஞ்சி தெரு, காதர் மொய்தீன் தெரு அன்பு மலர் தெரு ஆகிய தெருக்களில் மழை நீருடன் சாக்கடை நீரும், கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து செல்கிறது.

இது குறித்து ,மதுரை மாநகராட்சி சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், சாலைகளை பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரை தடுத்து நிறுத்த ஆர்வம் காட்டவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதே போன்று, மதுரை தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் கோவில் தெருவிலும், சாக்கடை நீர் சாலைக்கு மேலே பெருக்கெடுத்து ஓடுகிறது.

மதுரை நகரில் கடந்த பல நாட்களாக பாதாள சாக்கடை பணிக்கு சாலையிலே பள்ளங்கள் தோண்டப்பட்டு சரிவர வரை மூடப்படாமல் உள்ளதால், கழிவுநீரானது செல்ல வழியில்லாமல், பல இடங்களில் கழிவு நேரானது சாலையிலே குளம் போல தேங்கியுள்ளது. மதுரை தாசில்தார் நகர், கோமதிபுரம், ஜூபிலி டவுன் ஆகிய தெருக்களிலும் இதே நிலை நீடிக்கிறது.

இது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர், வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கோ. தளபதி ஆகியோர் தலையிட்டு , சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரை கழிவு நீர் வாய்க்கால் வழியாக செல்ல துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், தோண்டப்பட்ட சாலைகளில் மண்களை சீரமைத்து பொதுமக்கள் செல்வதற்கு ஏதுவாக சாலையை சீரமைக்கும்படி, குடியிருப்போர் நலச் சங்கங்கள், மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil