போதை பொருளை ஓழிக்க தீவிர நடவடிக்கை: மதுரை மாவட்ட எஸ்.பி தகவல்

போதை பொருளை ஓழிக்க தீவிர நடவடிக்கை:  மதுரை மாவட்ட எஸ்.பி  தகவல்
X

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்

போதை பொருளை ஓழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை போலீஸ் எஸ்.பி தெரிவித்தார்

போதை பொருளை ஓடிக் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை போலீஸ் எஸ்.பி தெரிவித்தார்.போதை பொருளை ஓடிக் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை போலீஸ் எஸ்.பி தெரிவித்தார்.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு, தமிழக காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக, குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் மற்றும் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி , கஞ்சா வியாபாரிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களில் விவரங்களை சேகரித்து, அனைத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதின் பேரில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, கைது செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் வங்கி கணக்கு மற்றும் அசையும், அசையா சொத்துக்கள் மதிப்பு சுமார் ரூ. 8,18,09,002/- முடக்கம் செய்யப்பட்டுள்ளது.இதுவரை- 559.8 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து குண்டார் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கஞ்சா வியாபாரிகள் மற்றும் கடத்துபவர்கள் மட்டுமல்லாது, அவர்களின் உறவினர்கள் சொத்துக்கள் அனைத்தும் சட்டப்படி முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business