மதுரை ரயில் நிலையத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு: ரயில் பெட்டிகளில் சோதனை!

மதுரை ரயில் நிலையத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு: ரயில் பெட்டிகளில் சோதனை நடைபெற்றது.

கேரளா மாநிலத்தில் குண்டுவெடிப்பு எதிரொலியாக, மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு:

கேரளம் மாநிலத்தில் உள்ள களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 52 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அம்மாநில போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ரயில் வளாகம், பார்சல் சர்வீஸ், ரயில் பெட்டிகளிலும் மோப்பநாய் உதவியுடன் அதிநவீன கருவிகளுடனும் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும், அவர்களின் உடைமைகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ரயில் நிலையத்திற்குள் அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ஓட்டு அரசியலுக்கு இலவசங்கள் எனில் கடும் எதிர்ப்பு - பா.ஜ. அண்ணாமலை வெளியிட்ட பளிச் எச்சரிக்கை..!