மதுரையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்
![மதுரையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம் மதுரையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்](https://www.nativenews.in/h-upload/2023/03/18/1682197-img-20230318-wa0019.webp)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முறையான விசாரணை செய்யாமல், விளக்கம் கேட்டு 17 ஏ- நோட்டீஸ் அனுப்பும் ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஆகியோரிடம் நீதி கேட்டு, மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலக முன்பாக ஊரக வளர்ச்சி துறை சங்கத்தை சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் அனைத்து அலுவலர்கள் இணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலூர் அருகேயுள்ள சருகுவளையபட்டி ஊராட்சியில், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் முறைகேடு நடைபெற்றதாக சித்தரிக்கப்பட்ட குற்றச்சாட்டின் மீது மாண்பமை, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டதன் படி புகார்தாரர், பாதிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களில் மாவட்ட நிர்வாகம் ஊழியர்களிடம் எந்த ஒரு விசாரணை நடத்தாமல் வேண்டுமென்றே புகார் தந்தவருக்கு ஆதரவாக, ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளக் கூடிய சூழ்நிலையை கண்டித்து, இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. முற்றிலுமாக சித்தரிக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து ஊழியர்கள் மீது விளக்கம் கேட்டு Transmission நோட்டீசை திரும்ப பெற வேண்டும் எனவும் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu