மதுரை புதுமண்டபத்தில் கடைகள் அகற்றம்: வியாபாரிகள் வேதனை

மதுரை புதுமண்டபத்தில் கடைகள் அகற்றம்: வியாபாரிகள் வேதனை
X

புது மண்டபத்தில் உள்ள 14 கடைகள் அகற்றம் வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே, புதுமண்டபத்தில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன

புது மண்டபத்தில் உள்ள 14 கடைகள் அகற்றம் வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே, புதுமண்டபத்தில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் , இந்த கடைகளுக்குள் மாற்று இடம் குன்னத்தூர் சத்திரத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த இடத்தில் போதிய ஏற்பாடுகள் செய்து தராத காரணத்தால் கடை உரிமையாளர்கள் அங்கு செல்லாமல் இருந்த நிலையில், 14 கடைக்கு மட்டும் மின் மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. இன்று காலை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில், மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் கடையின் உரிமையாளர்கள் இல்லாத நிலையில், பொருட்களை காவல்துறையினர் உதவியுடன் எல்லாம் அகற்றி, வெளியேற்றும் நடவடிகையில் ஈடுபட்டு வருகின்றனர். இது கடை உரிமையாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!