ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிக்கு வருவோர் இணையதளத்தில் பதிவு: ஆட்சியர்

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் (பைல் படம்)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தற்போது 20-க்கும் குறைவான பணியாளர்கள் உள்ள பணிகளையும் இணையதளத்தில், வாயிலாக வருகையினை பதிவு செய்தல் 01.01.2023 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ்சேகர் தெரிவித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகை இதுவரை பதிவேடுகளில் பதிவு செய்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் பணிகள் மற்றும் பணிபுரியும் பணியாளர்களின் வருகை விவரங்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி உரிய நேரம் வரை பணிபுரிவதை உறுதி செய்யும் வகையில், இணையதளத்தில் பதிவாகும் வகையில்20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள பணிகளில் பணிபுரியும் பணியாளர்களின் வருகையினை பதிவு செய்தல் 16.05.2022 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்தியஃமாநில அரசால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, 20-க்கும் குறைவான பணியாளர்கள் உள்ள பணிகளையும் (தனிநபர் திட்ட பணிகள் தவிர) இணையதளத்தில் பதிவாகும் வகையில்,வாயிலாக வருகையினை பதிவு செய்தல் 01.01.2023 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதி திட்டத்தின்கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் (மாற்று திறனாளிகள் உட்பட) காலை மற்றும் மதியம் தங்களின் வருகையினை தவறாமல் வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்பட்டு ஊதியம் வழங்க இயலும் எனவே, ஊராட்சி மன்ற தலைவர்கள் பணித்துணையாளர் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் இதனை அறிந்து இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ்சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu