மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல்: கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல்: கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது
X
பைல் படம்.
மதுரையில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை கள்ளச்சந்தை தடுப்புக் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மதுரை அருகே உள்ள சக்திமங்கலம் சமத்துவபுரம் பகுதியில் உள்ள பழைய கட்டடத்தில் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு ரேஷன் அரிசி கடத்தி வைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட அனுப்பானடியை சேர்ந்த வினோத் என்ற ராஜவேலு வயது (28), கல்மேடு அருள் பாண்டியன் வயது (31), சதீஷ்குமார் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் மேலும் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் வினோத்தை கைது செய்ய மாவட்ட ஆட்சியரிடம் போலீசார் பரிந்துரை செய்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து வினோத் போலீசார் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!