பொதுமக்கள் முகக் கவசம் அணிவது அவசியம்: மத்திய அமைச்சர்
மதுரை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில், குப்பைகளை அகற்றி தூய்மை பணியை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி துவக்கி வைத்தார்
கொரோனா மீண்டும் நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அமைச்சர் கிசன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள உழவர் சந்தை அருகில் உள்ள மதுரை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில், குப்பைகளை அகற்றி தூய்மை பணியை, மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசன் ரெட்டி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் கிசன்ரெட்டி துடைப்பம் மூலம் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார். அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தார்.முன்னதாக, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய அமைச்சர் கிசன்ரெட்டிக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் மத்திய அமைச்சர் கிசன்ரெட்டி பேசுகையில்: கொரோனா மீண்டும் நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். பிரதமர் கூறியது போல கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தூய்மை இந்திய திட்டம் வெற்றியடைய மக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை எனவும், முன்களப்பணி யாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பேசியதோடு, ஊடகவியலாளர்களுக்கு முகக்கவசங்களை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மதுரையில் இருந்து அமைச்சர் கிசன்ரெட்டி ராமேஸ்வரம் சென்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu