மதுரை அருகே பரவை பேரூராட்சி அலுவலக வாசலில் பொதுமக்கள் தர்ணா
அடிப்படை வசதி செய்துதரக் கோரி பரவை பேரூராட்சி அலுவலகத்தில தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மதுரை பரவையில், குடிநீர் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, பரவை பி. காலனி, குடியிருப்போர் நல பாதுகாப்பு சங்கம் விரிவாக்க பகுதி குடியிருப்பு வாசிகள், பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரவையில் ,பி. காலனி குடியிருப்போர் நல பாதுகாப்பு சங்கம் விரிவாக்கப் பகுதி குடியிருப்புகளுக்கு 35.ஆண்டுகளுக்கு மேலாக தார்ச் சாலை வசதி ,குடிநீர் உள்ளிட்ட திட்ட பணிகளை செய்து தராமல் இழுத்தடிக்கு வரும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, பெண்கள் உள்ளிட்ட100-க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி, கோஷங்களை எழுப்பினர்.
மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி 14 .வார்டுக்குட்பட்ட விரிவாக்கப் பகுதியான, பி.காலணி குடியிருப்பில் சுமார் 100-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளது. லேவுட் அங்கீகாரம் பெற்ற இக்குடியிருப்பு பகுதிகளுக்கு, கடந்த 35.ஆண்டுகளுக்கு மேலாக தார்ச் சாலை வசதியின்றியும், குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நீடித்து வருகின்றது.
இது குறித்து ,பலமுறை சம்பந்தபட்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கு குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், புகார் மனு கொடுத்தும்இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தனமாக பேரூராட்சி நிர்வாகம் இருந்துவரும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:இக்குடியிருப்பு சங்க நிர்வாகிகள் ரவி, மாடசாமி. சவரிமுத்து,மோகனசுந்தரம் ஆகியோர் தலைமையில் பெண்கள் 50-க்கு மேற்ட்ட குடியிருப்பு பகுதி சேர்ந்தவர்கள். பரவை பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர் .
இதையெடுத்து, சமயநல்லூர் இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ்வரி, சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ்,செயல் அலுவலர் பொறுப்பு. ஜெயலெட்சுமி, இளநிலை உதவியாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தியவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, போராட்டதாரர்கள் தரப்பை சேர்ந்த பெண்கள் சிலர் பேரூராட்சியால் அங்கீகரிப்பட்ட வீட்டு மனுகள் வீடு கட்டி குடியிருந்து வரும் விரிவாக்க பகுதிக்கு ஏன் இது வரை அடிப்படை வசதிகள் செய்து தர மறுக்கின்றீர்கள் என சமரசப் பேச்சு வார்த்தை நடத்த வந்த. அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு வாக்கு வாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், பேரூராட்சி அதிகாரிகள் தென்மாவட்டமழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகள் மேற்கொள்ள சென்று உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்ததால் அனைவரும் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.சுமார் 5.மணி நேரம் நீடித்த தர்ணா போராட்டத்தால் பேரூராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu