மதுரை மத்திய சிறையில் கண்ணாடி துண்டுகளை விழுங்கிய கைதி

மதுரை மத்திய சிறையில் கண்ணாடி துண்டுகளை விழுங்கிய கைதி
X

பைல் படம்

உறவினர்கள் தன்னைப்பார்க்க வராத விரக்தியில் கண்ணாடிதுண்டுகளை மதுரை சிறைச்சாலை கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

உறவினர்கள் பார்க்க வராததால் வேதனை தாங்கமுடியாமல் மதுரை மத்திய சிறைக் கைதி கண்ணாடி துண்டுகளை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 12-வது தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக் என்ற காட்டு ராஜா (வயது 23). இவர் மீது மதுரை மாநகர போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் காட்டு ராஜா கடந்த மாதம் பயங்கர ஆயுதங்களுடன் போதைப் பொருட்களை கடத்தி வந்தார். அப்போது அவரை தெப்பக்குளம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக் கடந்த மாதம் 29-ம் தேதி மதுரை மத்திய சிறையில் (3-ம் பிளாக்) அடைக்கப்பட்டார். அங்கு அவர் ஒரு மாத காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். மதுரை மத்திய ஜெயிலில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் வந்து பார்த்துச் செல்வது வழக்கம். அதேபோல தன்னையும் பார்க்க உறவினர்கள் வருவார்கள் என்று கார்த்திக் மிகவும் ஆவலுடன் காத்து இருந்தார். ஆனால் அவரை பார்க்க உறவினர்கள் எவரும் வரவில்லை.

படிக்க வேண்டிய வயதில் ஜெயிலுக்கு சென்றதால் பெற்றோர் மிகவும் கவலை அடைந்தனர். எனவே அவர்கள் கார்த்திகை ஜெயிலுக்கு சென்று பார்க்க விரும்பவில்லை என்று தெரிகிறது. மதுரை மத்திய ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வரும் தன்னை உறவினர்கள் நேரில் வந்து பார்க்கவில்லையே? என்று கார்த்திக் மிகவும் வேதனைப்பட்டு வந்தார். இதனை அவர் சக கைதிகளிடமும் பகிர்ந்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் மதுரை ஜெயிலுக்குள் தற்கொலை செய்து சாவது என்று கார்த்திக் முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் நேற்று மதியம் கழிவறை பகுதியில் உள்ள சுவரில் பதித்து வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி துண்டுகளை உடைத்து விழுங்கினார். அதன்பிறகு அவர் சக கைதி ஒருவரிடம், என்னை பார்க்க உறவினர்கள் எவரும் வரவில்லை. எனவே நான் கண்ணாடி துண்டுகளை உடைத்து நொறுக்கி விழுங்கி சாகப் போகிறேன். அப்போது அவர்கள் என்னை வந்து பார்த்து தானே ஆக வேண்டும்? என்று கண்ணீருடன் கூறினாராம்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தக் கைதி உடனடியாக ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். எனவே போலீசார் கார்த்திக்கை ஜெயில் வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது அவர் நான் சாக விரும்புகிறேன், எனவே மருத்துவமனைக்கு வரமாட்டேன் என்று மறுத்து அடம் பிடித்துள்ளார். இருந்த போதிலும் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று மதுரை ஜெயில் வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்

இதற்கிடையே கார்த்திக் கடுமையான வயிற்று வலியால் துடித்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வது என்று ஜெயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து கார்த்திக்கை போலீசார் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு மதுரை அரசு மருத்துவமனை்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மதுரை மத்திய ஜெயிலில் கைதி ஒருவர் கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாவட்ட அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story