மதுரையில் நள்ளிரவில் ரவுடியை சுட்டு பிடித்த போலீஸார்

மதுரையில் நள்ளிரவில்  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸார்
X

பைல் படம்

போலீசாரை பார்த்ததும், குருவி விஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்றபோது சுடப்பட்டனர்

மதுரையில் தாக்க முயன்ற ரவுடியை போலீஸார் சுட்டு பிடித்தனர்.

மதுரை அண்ணாநகர் பகுதியில், உள்ள செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ஒரு பெண்ணை நேற்று நள்ளிரவு ரவுடி குருவி விஜய் பலாத்காரம் செய்ய முயன்றபோது, அந்தப்பெண் கூச்சலிட்டுள்ளார். இதைக்கேட்ட , அருகிலிருந்தோர் 100-க்கு போன் செய்ததால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும், குருவி விஜய் மற்றும் அவரது கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்றனர். உடனே, போலீசார் குருவி விஜயை, காலில் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவரையும், அவரது கூட்டாளிகளையும் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். காலில் காயம் பட்ட குருவி விஜய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story