கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் கைது
மதுரை மாவட்டம் கொலை வழக்கில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு கிராமத்தில் கார்மேகம் மகன் பிரேம் என்பவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது சம்பந்தமாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவான எதிரிகளை கண்டு பிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்பேரில் சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான, சக்கிமங்கலம் கார்த்திக் கண்ணன் என்ற கருவாடு(22 ), சிலைமான் அருண்குமார்( 21 ) சக்கிமங்கலம் ரமேஷ்( 23 ) , சக்கிமங்கலம் மணிமாறன், கல்மேடு மணிகண்டன்( 25 ), கல்மேடு தர்ஷன் என்ற சமய முத்து( 21 ) ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேற்படி கொலை சம்பவம் ஆனது இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் செல்போன் பிரச்னையால் குடிபோதையில் நடந்துள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மதுரை மாவட்டத்தில் பொது இடங்களில் ஏரிகரைகளில் அமர்ந்து மதுபானம் குடிப்பது,பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக கும்பலாக செயல்படுவது, பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களை அதி விரைவாகவும் பயமுறுத்தும் வகையிலும் வாகனத்தை ஓட்டுபவர்கள் மீதும், பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இளைஞர்கள் கெட்ட செயல்களுக்கு அடிமையாகாமல் , போதைக்கு அடிமையாகாமல் தங்களை நல்வழியில் ஈடுபடுத்தி இந்த சமுதாயத்தினை முன்னேற்றுவதற்கு உறு துணையாக இருக்கும்படியும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu