விவாகரத்து கேட்ட மனைவி: மனமுடைந்த கணவன் தற்கொலை

விவாகரத்து கேட்ட மனைவி: மனமுடைந்த கணவன் தற்கொலை
X

பைல் படம்

மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 9 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

மனைவி விவாகரத்து வழக்கு : கணவர் தற்கொலை.

மதுரை டிவிஎஸ் நகர் கோவலன் நகர் 2வது தெரு ராமச்சந்திரன் மகன் வெங்கட்ராமன் 29. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.. பல்வேறு காரணங்களால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனால் அவர்கள் இருவரும் விவாகரத்து வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனால் மனமுடைந்த வெங்கட்ராமன் வெங்கடாசலபுரம் மதுக்கடை அருகே மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் எலி விஷத்தை சாப்பிட்டது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவருடைய அப்பா இராமச்சந்திரன் சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் வெங்கட்ராமனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன் கடையில் முதியவரை தாக்கிய ஊழியர் கைது.

மதுரை சிம்மக்கல் வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி 61. இவர் குருவிக்காரன் சாலை வைகை தென்கரையில் மீன் வாங்க சென்றிருந்தார். மீன்கடையில் மீன் மற்றும் நண்டுகள் வாங்கினார். அதை சுத்தம் செய்ய கடை ஊழியரிடம் கொடுத்துள்ளார். கடை ஊழியர் காயிதே மில்லத் நகர் ஏழாவது தெருவை சேர்ந்த இப்ராஹிம் மகன் முகமது யாசிர் என்பவர் அவற்றை வாங்கி சுத்தம் செய்து கொடுத்தார் .அப்போது அந்த நன்டுகள் கெட்டுப் போயிருந்தது. அதற்குப்பதிலாக வேறு நண்டுகள் மாற்றி தரும்படி கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த ஊழியர் முதியோர் கிருஷ்ணசாமியை தாக்கினார்.இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மீன் கடை ஊழியர் முகமது யாசினை கைது செய்தனர்.

வீட்டின் அருகே கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்த வாலிபர்களை தட்டிக் கேட்டவரை தாக்கிய ஏழு பேர் கைது

மதுரை காளவாசல் சம்மட்டிபுரம் முதல் தெரு அழகு ராஜ் மனைவி திரவிய மணி 48. அதே பகுதியை சேர்ந்தவர்கள் அய்யனார் குட்டி மகன் கண்ணன். இவரும் இவரது நண்பர்கள் மொத்தம் ஏழு பேர் அவர்கள் வீட்டின் அருகே நின்று சப்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். இதை அழகு ராஜ் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் அழகுராஜையும் அவரது மகனையும் திரவியமணியையும் ஆபாசமாக பேசி அவர்களை தாக்கியுள்ளனர். அவர்கள் வீட்டில் முன்பாக நிறுத்தி வைத்திருந்த பைக் மற்றும் சைக்கிளை அடித்து சேதப்படுத்தினர் .இந்த சம்பவம் குறித்து திரவியமணி எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பட்டிபுரம் கண்ணன், சுப்பிரமணி மகன் வெங்கடேசன், உதயசூரியன் மகன் தரனேஸ்வரன், ராமசாமி மகன் ஆனந்தராஜ் உள்பட ஏழு வாலிபர்களை கைது செய்தனர்.

பண பிரச்னையில் முன்விரோதம் காரணமாக தாக்குதல்:வாலிபர் கைது.

மதுரை செல்லூர் கீழ வைத்தியநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் கௌதம் .இவரது வீட்டில்வாடகைக்கு குடியிருப்பவ.ர் பிச்சை மகன் இன்பக்கொடி 38 இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் வீட்டின் உரிமையாளர் கௌதமை இன்பக்கொடி ஆபாசமாக பேசி கத்தியால் தாக்கினார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி சௌமியா செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் கணவரை தாக்கிய இன்பக்கொடியை கைது செய்தனர்.

மரம் அறுவை இயந்திரத்தில் சிக்கிய தொழிலாலி உயிரிழப்பு

மதுரை .வெங்கடாசலபுரம் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் காசிராஜன் 55 இவர் அந்த பகுதியில் உள்ள மர அறுவை மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் மர அறுவை எந்திரத்தில் மரங்களை அறுவை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அறுவை எந்திரத்திற்குள் அவருடைய இடது கை சிக்கியதில் கை இரண்டாக துண்டானது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேறி யதால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாமாக உயிரிழந்தார். இது குறித்து மகன் லோகமாயக்கண்ணன் கொடுத்த புகாரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!