மதுரை அரசு மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது

மதுரை அரசு மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது
X

பைல் படம்

மதுரையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

நாகமலை புதுக்கோட்டையில் நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு

மதுரை நாகமலை புதுக்கோட்டை மகா கணபதி நகரை சேர்ந்தவர் விவேகா(36.) இவர் காற்றுக்காக கதவை பூட்டாமல் சாத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம ஆசாமி சத்தமில்லாமல் கதவைத்திறந்து வீட்டுக்குள் புகுந்தார்.அவர் வீட்டில் வைத்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து விவேகா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வீடுபுகுந்து நகை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்

வாலிபர் மீது தாக்குதல்: சிறுவன் உள்பட இரண்டு பேர் கைது

மதுரை திடீர்நகரை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் முத்துப்பாண்டி(26.) இல்இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜாபர் அலி மகன் ரகுமான் கான்( 27,) இருவருக்கும் முன்விரோதம் இருந்தது.இந்நிலையில் ரேஷன் கடை அருகே சென்ற முத்து பாண்டியை ரஹ்மான்கானும், பதினேழு வயது சிறுவனும் வழிமறித்து ஆபாசமாக பேசி மரக்கட்டையால் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டி திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய சிறுவன் உட்பட இரண்டு பேரையும் கைது செய்தனர்.

தெற்குவெளி வீதியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

மதுரை தெற்குவெளி வீதி மீனா லூர்தீன் பள்ளிவாசல் சந்துவை சேர்ந்தவர் கணேசன் மகன் சரவணதீபக்(21.) இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா வசந்தி தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சரவணனதீபக்கின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை: போலீஸார் விசாரணை

மதுரை கேகே நகர் மல்லிகை குடியிருப்பை சேர்ந்தவர் மகன் உதய பாரத்(21.) இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தாய் சாந்தி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து உதயபாரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வலசேரிகாடு என்ற ஊரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகேசன்(37.)இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்தார். அவருடைய செல்போனை வாலிபர் ஒருவர் நள்ளிரவில் திருடினார். இதை அறிந்த முருகேசன் மற்றும் சிலரும் அந்த வாலிபரை விரட்டிப்பிடித்தனர்.அவர்கள் கையும் காலமாக பிடிபட்ட வாலிபரை அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் மேலவாசல் திடீர் நகர் முதல் பிளாக்கை சேர்ந்த ஆறுமுகம் மகன் வடிவேலு 34 என்று தெரிய வந்தது அவரை போலீசார் கைது செய்தனர்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!