போலீஸார் மற்றும் செய்தியாளர்கள் இடையே வாக்குவாதம்: பரபரப்பு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் ,போலீசார் மற்றும் நிருபர்கள் இடையே நடந்த வாக்குவாதம்.
Police And Journalists Argument
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்புற வாயிலை மறைத்து மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கலெக்டர் அலுவலகத்தின் நான்கு பகுதியில் உள்ள கதவுகளையும் இழுத்து மூடினர்.
இதனால், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே செல்ல முடியாமல் வெயிலில் தவித்தனர்.மேலும், போலீசார் செய்தியாளர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுத்தனர். இதனால், ஆவேசமடைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளரும் மூத்த பத்திரிகையாளருமான ரவிச்சந்திர பாண்டியன், பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை துணை ஆணையாளர் அனிதாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, 3 மணி நேரம் கழித்து கதவு திறக்கப்பட்டது.
அதன் பின்பு, செய்தியாளர்கள் கலெக்டர் அலுவலகம் உள்ளே சென்றனர். அவர்களை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், கலெக்டர் அலுவலகம் முன்பாக பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
பொதுவாக, மாவட்டத் தலைநகரங்களில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருவது, போலீஸ் அலுவலர்களுக்கு தெரியதா?.
செய்தியாளர்கள், போட்டோகிராபர்கள் பிஆர்ஒ அலுவலக வளாகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறையில் அமர்ந்து செய்தி சேகரிப்பது நடைமுறையில் உள்ளதாக, பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இது கூட தெரியாமல், செய்தியாளர்களை, ஆட்சியர் அலுவலக வாசலில் காக்க வைப்பதில், போலீஸாருக்கு என்ன லாபம் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu