மதுரையில் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
X

மதுரையில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

மதுரையில் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள எம் எஸ் திருமண மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தென் மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வீரகுமார், மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் வடக்கு மண்டல இணை செயலாளர் ஏ.கே. மூர்த்தி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி, ஆலோசனைகள் வழங்கினார்கள்.

மேலும், கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுரையில் சுற்றிப் பல குளங்கள் ஏரிகள் இருந்து தற்பொழுது அது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஏரி மற்றும் குளங்களை கண்டறிந்து, தூர்வாரி அவற்றை சீரமைக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பல பகுதிகளில் நடைபெற்று முடிந்த போதிலும், தெருக்கள் முறையான தார் சாலை இல்லை ஆகையால், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும், அதில் ஊழல் குற்றச்சாட்டுகள் நடந்திருப்பதால், தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவு வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உடன் கோமதி அம்மாள், திருமலை குமாரசாமி யாதவ், ஐயம்பெருமாள் மற்றும் பலர் தென் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story